Home Notification Coming Soon தமிழகத்தில் 10,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வி ஆணையர் தகவல்

தமிழகத்தில் 10,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வி ஆணையர் தகவல்

0
தமிழகத்தில் 10,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வி ஆணையர் தகவல்
Tamilnadu Teachers Eligibility Test

Tamilnadu Teachers Eligibility Test 2023 – TNTET 2023

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இத்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.போட்டித்தேர்வு:தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு(TET) தாள் – 1 நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்- 2 தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இந்த தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வுடன் போட்டி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வில் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணிக்காக காத்து கிடக்கின்றனர்.

For mock test: Click here

இவர்களுக்கான நியமன தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான நியமன தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். அதே போன்று வட்டார கல்வி அலுவலர், கல்லூரி உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பும் மே மாதம் அறிவு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Teachers Eligibility Test 2023 – TNTET 2023

error: Content is protected !!