சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா
- ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.
- இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .
- சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
- 1856 ஆம் ஆண்டு – பஞ்சாப் ராவி
- 1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்
- இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.
- வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்
- மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.

நகர அமைப்பு
- நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.
- கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.
- அகன்ற சாலைகள் – வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.
- இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.
- வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.
- சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.
- ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன.
பெருங்குளம்.
- நீர் கசியாதிருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்கள்.
- இரு பக்கங்களிலும் படிக்கட்டு.
- உடைமாற்றும் அறைகள்.
- தூய்மையான நீர் வரவும் , அழுக்குநீர் வெளியே செல்ல கால்வாய் வசதி.
கழிவு நீர்
- கழிவு நீர், பாதாள சாக்கடை.
- கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.
- திறந்து பழுது பார்க்கும் வசதி
- வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

வாழ்க்கை முறை
- நகராட்சி நிருவாகம். – கடல் வணிகம்
- வணிகத் தொடர்பு: மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்
- தெரியாத விலங்கு: குதிரை. தெரியாத உலோகம்: இரும்பு.
- ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.
- முக்கிய உணவு: கோதுமை, பார்லி
- பருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.
- காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.
- வெள்ளியை இறக்குமதி செய்தனர்.
- நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்
- பருத்தி கம்பளி நெய்தனர்.
- வேட்டி – கீழ் ஆடை சால்வை – மேல் ஆடை
- ஆண் பெண் – இருவரும் அணிகலன்
- தங்கம் வெள்ளி – அணிகலன்
- செம்பு வெண்கலம் – விளையாட்டு, ஆயுதம் , வீடு சாமான்
- கைத்தொழில் – எழுத்து பணி , முத்திரை செய்வோர், கட்டிட பணி மர சாமான் செய்வோர்

எழுத்து முறை
- வலமிடருந்து இடமாகவும், மற்றும் வலமிருந்து இடம், தொடர்ந்து இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.
- “சிந்துசமவெளி மொழி பண்டைய தமிழ் வடிவமே” – ஹிராஸ் பாதிரியார்.
- தொல் தமிழ் எழுத்துடன் தொடர்பு

சுடுமண் முத்திரை
- சுடுமண் (Terracotta) முத்திரைகளும் சுடுமண் உருவ பொம்மைகளும்
- முத்திரைகளின் வடிவம் செவ்வகம். – 100+
- சித்திர வடிவான எழுத்துகள் அதில் உள்ளன.
- டெர்ரெர் கோட்டா – சுடுமண் பாண்டம்
- பறவை விலங்கு ஆண் பெண் உருவம்
- காளை , வண்டி, புறா, படகு , யோக நிலையில் ஒருவர் அமர்ந்துள்ள உருவம்.

சிற்பம் & சமயம்
- வெண்கல நாட்டிய மங்கை சிலை – மொகஞ்சதாரோ
- தாடியுடன் கூடிய ஒருவரின் சுண்ணாம்பு கல் சிலை
- வணங்கியவை – பசுபதி என்ற சிவன் , பெண் கடவுள் லிங்கம் சூலம், மரம்
- இறந்தவர்களை தாழிகளிலிட்டு புதைத்தல் – அவர்களின் அணிகலன் சேர்த்து
- சக்கரத்தை பயன்படுத்தி சட்டி பானை – பளபளப்பான வண்ணம் பூசப்பட்டு உள்ளன



நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
டில்லி
லோத்தல்
மொகஞ்சதாரோ
ரூபார்
பயன்பாட்டு அறிவியல்
- கட்டிட தொழில் , நிலம் தேறுதல்
- மனை அளவீடு ..வடிவ கணித அமைப்பு
- தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன
அழிவுக்கானக் காரணங்கள்
- பெரும் தீ , உள்நாட்டு போர் சிந்து வெள்ள பேருக்கு
- ஆரியர்களின் வருகை. படையெடுப்பு
முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
ஆர்.டி. பானர்ஜி
சர் ஜான் மார்ஷல்
ஹரப்பா கால முக்கிய நகரங்கள்
| ஹரப்பா | – | பஞ்சாப், பாகிஸ்தான் |
| மொகஞ்சதாரோ | – | சிந்து, பாகிஸ்தான் |
| டோலாவிரா | – | குஜராத், இந்தியா |
| காலிபங்கன் | – | ராஜஸ்தான், இந்தியா |
| லோத்தல் | – | குஜராத், இந்தியா |
| பனாவலி | – | ராஜஸ்தான், இந்தியா |
| ராக்கிகார்ஹி | – | ஹரியானா, இந்தியா |
| சர்கோட்டடா | – | குஜராத், இந்தியா |
TNPSC Previous Year Question & Answers