Home திருக்குறள் தினம் ஐந்து திருக்குறள்: உழவு – (பொருட்பால்)

தினம் ஐந்து திருக்குறள்: உழவு – (பொருட்பால்)

0
தினம் ஐந்து திருக்குறள்: உழவு – (பொருட்பால்)

உழவு – (பொருட்பால்):-

  1. சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை

» பொருள்

விளக்கம் : பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது

Couplet :
Howe’er they roam, the world must follow still the plougher’s team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem

Explanation : Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer

Transliteration : Suzhandrumerp Pinnadhu Ulakam AdhanaalUzhandhum Uzhave Thalai

கலைஞர் உரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

மு.வ உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

  1. உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து

» பொருள்

விளக்கம் : பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

Couplet :
The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share

Explanation : Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil

Transliteration : Uzhuvaar Ulakaththaarkku Aaniaq ThaatraadhuEzhuvaarai Ellaam Poruththu

கலைஞர் உரை: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

மு.வ உரை: உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை: உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

  1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

» பொருள்

விளக்கம் : உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது

Couplet :
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give

Explanation : They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life

Transliteration : Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar RellaamThozhudhuntu Pinsel Pavar

கலைஞர் உரை: உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

மு.வ உரை: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

  1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்

» பொருள்

விளக்கம் : பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

Couplet :
O’er many a land they ‘ll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain

Explanation : Patriotic farmers desire to bring all other states under the control of their own king

Transliteration : Palakutai Neezhalum Thangutaikkeezhk KaanparAlakutai Neezha Lavar

கலைஞர் உரை: பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

மு.வ உரை: நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

  1. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்

» பொருள்

விளக்கம் : தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

Couplet :
They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live

Explanation : Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

Transliteration : Iravaar Irappaarkkondru Eevar KaravaadhuKaiseydhoon Maalai Yavar

கலைஞர் உரை: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

மு.வ உரை: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை: தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

error: Content is protected !!