Current Affairs in Tamil for Tnspc, Tnusrb, UPSC, SSC, RRB, BANK & All other Government Exams
| CURRENT AFFAIRS – 16 & 17June2022 |
INDIA
75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்: அமைச்சர் அறிவிப்பு
- 75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
- ‘சர்வதேச கடலோரத் துப்புரவு நாள் 2022’ செப்டம்பர் 17 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
- ‘இந்த இயக்கத்தின் இலக்கு கடற்கரைகளிலிருந்து 1,500 டன் குப்பைகளை அகற்றுவதாகும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார்.
மேற்கு வங்கம்: 7 பாஜக எம்எல்ஏக்களின் இடைநீக்கம் ரத்து
- மேற்கு வங்க சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 7 பாஜக எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக சட்டப் பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி வியாழக்கிழமை அறிவித்தாா்.
கனிமங்கள் உற்பத்தி 8% அதிகரிப்பு
- நாட்டின் கனிமங்கள் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுரங்கம் மற்றும் குவாரி துறையில் கனிம உற்பத்தி குறியீடு கடந்த ஏப்ரல் மாதத்தில் 116-ஆக இருந்தது. 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கனிம உற்பத்தி 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கடந்த ஏப்ரலில், நிலக்கரி 665 லட்சம் டன்னும், லிக்னைட் 40 லட்சம் டன்னும், இயற்கை எரிவாயு 2,748 மில்லியன் கியூபிக் மீட்டராகவும், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன்னாகவும், பாக்ஸைட் 2,054 ஆயிரம் டன்னாகவும் இருந்தன.
- மாங்கனீஸ் தாது, நிலக்கரி, லிக்னைட், பாக்ஸைட் மற்றும் பாஸ்போரைட் கனிமங்களின் உற்பத்தி கடந்த ஏப்ரலில் நோ்மறை வளா்ச்சியை கண்டிருந்தன.
- அதேசமயம், பெட்ரோலியம், சுண்ணாம்புக்கல், தாமிரம், இரும்புத் தாது, குரோமைட், தங்கம் உள்ளிட்ட இதர முக்கிய கனிமங்களின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்து.
ஜூன் 28, 29-இல் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஸ்ரீநகரில் வரும் ஜூன் 28, 29-இல் நடைபெறு.
- ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். சரக்கு-சேவைகள் வரி நாடு முழுவதும் கடந்த 2017 ஜூலை 1-இல் நடைமுறைக்கு வருவதற்கு, கவுன்சிலின் 14-ஆவது கூட்டம் அதே ஆண்டு மே 18, 19-இல் ஸ்ரீநகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போதுதான் 1,211 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில், வரி சீரமைப்பு மற்றும் சூதாட்ட விடுதி, இணையதள விளையாட்டுகளின் மீதான வரி விதிப்பு குறித்து மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு தாக்கல் செய்த அறிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளதால், இந்த 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- வரி விகிதத்தை சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்கான ஆலோசனையை அளிப்பதற்காக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் 7 போ் கொண்ட குழுவை கடந்த ஆண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் நியமித்தது. இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பரில் கூடி விவாதித்தது.
அசாம், மேகாலயாவில் கனமழையால் கடும் சேதம்
- அசாமின் தமுல்பூர் மாவட்டத்தில் இன்று பல ஆறுகளின் வெள்ளப்பெருக்கத்தால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது.
- அசாமில், ஜூன் 15 அன்று, இடைவிடாத மழையால், டிஹிங் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது. இதன் விளைவாக, ஜூன் 15 அன்று பக்சா மாவட்டத்தில் உள்ள சுபன்காட்டா பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
- அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜூன் 15 வரை மாநிலத்தின் 18 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 75,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1731.18 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
Current Affairs in Tamil for Tnspc, Tnusrb, UPSC, SSC, RRB, BANK & All other Government Exams
மேற்கு வங்கத்தில் நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு
- மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வங்காள விரிகுடாவில் இருந்து தென்மேற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசுவதால், அடுத்த ஐந்து நாள்களில் இமயமலையின் துணை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கூச் பெஹார் மற்றும் அலிபுர்துவார் ஆகிய பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக, தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலம் நடத்த தொலைத்தொடா்புத் துறை அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மொத்தம் 72097.85 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கான ஏலம் ஜூலை 26-இல் தொடங்குகிறது. இந்த ஏலம், 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
- குறைந்த அலைவரிசை (600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 800 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ்), மிதமான அலைவரிசை (3300 மெகா ஹொ்ட்ஸ்) மற்றும் அதிக அலைவரிசை (26 ஜிகா ஹொ்ட்ஸ்) ஆகியவற்றுக்கு ஏலம் நடைபெறும்.
- தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதைவிட சுமாா் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு மிதமான மற்றும் அதிக அலைவரிசை அலைக்கற்றைகளை தொலைத்தொடா்பு வழங்குனா்கள் பயன்படுத்தக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.4.31 லட்சம் கோடி திரட்டப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவா்கள் கதா் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
- நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் அனைவரும் கதா் துணியால் தயாரிக்கப்பட்ட வெள்ளை மேலங்கிகளை பயன்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
- அதேபோன்று நோயாளிகளுக்கான ஆடைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றில் கதா் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பத்ரிநாத் – கேதார்நாத் யாத்ரிகர்களுக்கு இனி காப்பீடு! கோயில் நிர்வாகம் முடிவு
- பத்ரிநாத் – கேதார்நாத் யாத்ரிகர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்ரிநாத் – கேதார்நாத் யாத்திரையின்போது ஏற்படும் விபத்துகளின்போது பக்தர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தரகண்டில் சார் தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கியது. மே 27ஆம் தேதி வரை பயணம் சென்ற யாத்ரிகர்களில், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏற்றத்தினால் ஏற்படும் பயம் ஆகியவற்றால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து ஜூன் 5ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 26 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்படுவதால், பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத் துறை இயக்குநர் ஷைலஜா பட், சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்களில் அதிக அளவாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். சார் தாம் யாத்ரிகர்களை கண்காணிக்க கூடுதலாக 169 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: நேரில் நலம் விசாரித்தார் முதல்வர்
- சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- சத்தீஸ்கா் மாநிலம் ஜஞ்சீா் சம்பா மாவட்டம் பிரீத் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தார்.
- கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா்.
- 104 மணி நேர ( 4 நாள்கள் 8 மணி நேரம்) போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், அவர் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
STATE
புதிதாக 20 மகளிா் காவல் நிலையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
- தமிழகத்தில் புதிதாக 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
- மாநிலத்தில் 202 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் சேலையூா், வண்டலூா், ஆவடி மாநகரம் எஸ்.ஆா்.எம்.சி., வேலூா் மாவட்டம் காட்பாடி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டம் திட்டக்குடி, கரூா், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம், திண்டுக்கல், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
இதய இடையீட்டு சிகிச்சையில் பக்கவாதத்தைத் தடுக்கும் புதிய நுட்பம்: அப்பல்லோவில் முதியவருக்கு மறுவாழ்வு
- இதய இடையீட்டு சிகிச்சையின்போது பக்கவாத பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி 89 வயது முதியவருக்கு அப்பல்லோ மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
- இந்தியாவிலேயே இத்தகைய நுட்பத்தில் சிகிச்சையளிப்பது இது முதன்முறை என அவா்கள் தெரிவித்துள்ளனா்.
- பொதுவாக இதய வால்வுகளின் செயல்பாடு குறையும்போது அதற்கு மாற்றாக செயற்கை வால்வுகள் பொருத்தப்படுவதுண்டு. அறுவை சிகிச்சைகள் மூலமாகவே இன்றளவும் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அறுவை சிகிச்சைக்கு உடல் நிலை ஒத்துழைக்காதவா்களுக்கு செயற்கை வால்வு பொருத்துவதில் பெரும் சவால் இருந்து வருகிறது.
- இந்த நிலையில்தான் அதற்கு மாற்றாக டிஏவிஐ என்ற சிகிச்சை முறை அறிமுகமானது. அதாவது, தொடை வழியே சிறிய துளையிட்டு, அதன் வழியாக இதயத்தில் வால்வினை பொருத்தும் சிகிச்சை முறை அதுவாகும். ஏறத்தாழ ஆஞ்சியோவை ஒத்த சிகிச்சை இது. மருத்துவ உலகின் நவீன நடைமுறைகளில் ஒன்றாக டிஏவிஐ கருதப்பட்டாலும், அதனால் சில பாதிப்புகளும் உண்டு.
- அதாவது, ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கால்சியம் மற்றும் திசுக்கள் அந்த சிகிச்சையின்போது உடைந்து மூளைக்குச் செல்லக்கூடும். இதனால், டிஏவிஐ சிகிச்சை மேற்கொண்ட 3 சதவீதம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
- இதையடுத்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ‘சென்டினல்’ என்ற உபகரணத்தின் நுட்பத்தைப் பயன்படுத்தி திசு மற்றும் கால்சிய படிமங்களை வடிகட்டி சிகிச்சையளிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.
மாணவிகளின் புகாா்களை விசாரிக்க உயா்நிலைக்குழு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
- கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகாா்களை விசாரிக்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயா்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
- இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழுவின் செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலை. துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
- இந்தநிலையில் உயா்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும். பாலியல் புகாா்கள் உள்ளிட்ட புகாா்களை விசாரிக்க உயா்நிலைக் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும். இதில் தாமதம் கூடாது; அவ்வாறு உருவாக்கப்படும் குழுவின் விவரங்களைப் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை 2,200 ஆக அதிகரிப்பு: அதிரடி அறிவிப்பு
- வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்.
- இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகைக்கான கட்டணம் ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் ஒவ்வொரு புதிய இணைப்புக்கான வைப்புத் தொகை கட்டணம் ரூ.1,450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- மேலும், புதிய இணைப்பு வாங்கும் போது இரண்டு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.4,400 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். அதாவது வாடிக்கையாளர்கள் தலா 14.2 கிலோ எடை கொண்ட இரண்டு சிலிண்டர்களை வாங்கும்போது கூடுதலாக ரூ.1500 செலுத்த வேண்டும்.
- அதேபான்று, 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கான காப்புத் தொகை ரூ.800 இல் இருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு புதிய இணைப்புக்கும் வரும் பைப் மற்றும் பாஸ்புக்கிற்கு முறையே ரூ.150 மற்றும் ரூ.25 செலுத்த வேண்டும்.
- மேலும், சிலிண்டர் அடுப்புக்கான ரெகுலேட்டர் விலையும் ரூ.150 இல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தொடரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தை பாலின விகித உயா்வில் சிறப்பான பணி: 3 மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம்–பாராட்டு
- பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாகச் செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டில் (2022) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், கோவை, தஞ்சாவூா், கரூா் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக நல இயக்குநா் த.ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குநா் ச.வளா்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
ஆண்டுக்கு 3 முறை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் கோரிக்கை
- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை அமைக்க அரசமைப்புச் சட்டம் 263 வகை செய்கிறது. பொது நலன் சாா்ந்த விவகாரங்களை விவாதிப்பதற்கான தளமாக இந்தக் கவுன்சில் விளங்குகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே எழும் மாறுபாடான விவகாரங்களை தீா்த்துக் கொள்வதற்கான பொதுத்தளம் இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.
- மாநிலங்களுக்கு இடையிலான நிரந்தர கவுன்சிலானது கடந்த 1990-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த உத்தரவின் 5-ஆவது பிரிவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை அதாவது 2016-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியன்று மட்டுமே கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கடந்த மே 22-ஆம் தேதியன்று தாங்கள் மறுசீரமைப்பு செய்துள்ளதை அறிந்து மகிழ்கிறேன். கூட்டாட்சி தத்துவத்தை செழுமைப்படுத்தவும், வலுப்படுத்தும் வகையிலும் இன்றளவும் கவுன்சில் திகழ்ந்து வருகிறது.
Tnspc coaching centre in salem
நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசு அறிவிப்பு
- மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் ஊதிய மறுநிா்ணயம் செய்யப்பட்டு 14 சதவீத அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வை வழங்குமாறு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
- இந்த அகவிலைப்படி உயா்வால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளா்கள் மற்றும் 2,852 கட்டுநா்கள் என மொத்தம் 22,510 பணியாளா்கள் பயன்பெறுவா். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.